Tuesday, December 27, 2011

Mr. யார் - இப்படிக்கு பதிவன்! ~ பாகம் 2

வணக்கம் நண்பர்களே...




முதல் பாகம் பார்க்க...Mr. யார் - இப்படிக்கு பதிவன்!


பதிவர்கள் பற்றிய என் பார்வை இது...இது மற்றவர்கள் பார்வையில் வேறுபடலாம்....எப்ப பாரு நாலு பேருக்கு தெரிஞ்சவங்கள பத்தியே பதிவுல போடுறோம்..அதனால..ஒரு கலவையா இருக்கட்டுமே..!


இவர்...எல்லோருக்கும் அறிமுகமான திரு. நிரூபன்...நாற்று


இவரைப்பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை..என்றாலும்...இவரின் பல ஈழம் பற்றிய பதிவுகள் பிரமிக்க வைத்தன...பல பதிவுகளில் நான் கமன்ட் போடாமல் வந்து இருக்கிறேன்..என்ன சொல்ல...தெரியல...!


மிகப்பெரிய அளவில் குறுகிய காலத்தில் பதிவுலகில் சாதித்த பதிவர் என்பதில் இவருக்கு முதல் இடம் உண்டு...


விக்கி பன்ச்: சில நேரத்துல எதோ பிட்டு பட தலைப்பு போல இருக்கு தலைப்புகள் ஹிஹி!


அடுத்து திரு. சம்பத் குமார்...தமிழ் பேரன்ட்ஸ்




இவரு பாக்குற பார்வைய பாத்த லைட்டா அமீர் கணக்கா இருக்காரு...எதுக்கும் உலக படம் ஏதாவது சுட்டு எடுப்பாரா தெரியாதுங்கோ..!


இவருடைய குழந்தை வளர்ப்பு பற்றிய பதிவுகள் பிரசித்தி பெற்றவை...பல விஷயங்களை சொல்லி செல்லும் பாங்கு அருமையாக இருக்கிறது...நடு நடுவே..சமூக அவலங்களை பற்றிய கவிதைகளை அடித்து விடுகிறார்...


பொதுவாக எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்..இருந்தாலும் சிலரின் வரிகள் மனதை பாதிக்கும்...அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவர்...தொடரட்டும் உம்பணி...


விக்கி: மாப்ள உனக்கு எத்தன குழந்தைங்க...


சம்பத்: ஏன் மாம்ஸ் ஒண்ணுதான்...


விக்கி: அவ்வ்!


விக்கி பன்ச்: ஆனாலும் பாருங்க...என்னமோ பத்து புள்ள பெத்தாப்ல பதிவுகள் இருக்கு ஹிஹி!


இவர்..திரு. வீடு...வீடு K.S.சுரேஸ்குமார்




இந்த பதிவரும் சரக்கடிப்பாராங்கர கணக்கா இருக்க பதிவர் இவர்...பலர் கோடு போட்டா இவர் அவங்களுக்கு ரோடு போட்டு கொடுக்கறாரு..அதாங்க படம் வரைந்து கொடுக்குற கில்லாடி...!


சிறுகதைகள் பல எழுதி தன்னோட ப்ளோக்ல போட்டுட்டு வராரு...அதுவும் முக்கியமா காதல் கதைகள் அப்படின்னு சொல்லிட்டு அந்த கால மீட்டர்கள ச்சே மேட்டர்கள போட்டு இருக்காரு பாருங்க ஸ் ஸ் அபா...சரிப்பா நடத்து..!


விக்கி: ஏன்யா...கைய புடிச்சி இழுத்தியா...


சுரேஷ்: எங்க இழுத்தியா...( கவனிக்கவும் யார் கையன்னு கேக்கவே இல்ல!) 


விக்கி பன்ச்: பய புள்ள பதிவுல வர்ற கதைகள்ல அங்க...அங்க(!) நமீதா ரேஞ்சுக்கு வார்த்தைகள் வருது!...பாத்து குறைசிக்கய்யா..கமன்ட் போடவே பயமா இருக்கு ஹிஹி!


இது திரு...உலக நாயகன் ரேஞ்சுக்கு சிகை அலங்கராம் செய்து இருக்கும் பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...திரு..பிலாசபி பிரபா: 


இவர பத்தி என்ன சொல்றது..அந்த காலத்து பாகவதர் ஸ்டைல்ல முடிய வச்சிக்கிட்டு..அஞ்சாதே வில்லன் கணக்கா பதிவெழுதுறாரு!.....இவரு பெரிய ஆளுங்க(!)... இந்த மூர்த்தி சின்னது கீர்த்தி(பொண்ணு இல்லைங்க!) பெரிசுன்னு சொல்வாங்களே...அது இவருக்கு நல்லாவே பொருந்தும்...இவரோட வலைச்சர உழைப்பு சான்சே இல்ல...இன்னைக்கு வரைக்கும் பலரால் செய்ய முடியாதது...ஒயின்ஷாப் எப்பவுமே ராவா இருக்குறது இவரோட பலம்!


விக்கி: என்னயா எப்படி இருக்க...


பிரபா: ஏன் தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க...யோவ் இப்போ நான் உன்கிட்ட பேசுனத பதிவா போட்டு தொலைக்காத..!


விக்கி பன்ச்: கேட்டால் வலைப்பூவுக்கு வணக்கம் வாய்க்காலுக்கு சுனக்கம்னுட்டு சொல்வாரு...பய புள்ள ஓட்டும் கருத்தும் போடுறது யாருன்னு தெரியல போல ஹிஹி!


இந்தாளு பாக்க சுள்ளான் மாதிரி இருந்து கிட்டு என்னமா கின்டுறாரு(!)..பேரு என்னப்பா...என்னமோ சொன்னாரே..மெட்ராஸ்பவன் ஆங்...!


சிவான்னு பேரு வச்சிக்கிட்டு...சிவ சிவான்னு இருக்குற பல அரசியல் விஷயங்கள மேலோட்டமா போட்டு கொல்றாரு! சமீபத்திய தாக்கம்..உற்சாக பானம் பற்றிய பதிவு அருமை!...என்ன ஒன்னு நாம அவர் இஷ்டத்துக்கு படிக்கனும்ங்கறது போலவே சில பதிவுகள் இருக்கு ஹிஹி!


குறிப்பா...லேட்டஸ்ட் சங்கமம் பற்றிய பார்வை...மற்ற படி கலக்கல் பதிவர்...என்ன நெறைய பதிவுக்கு போறதில்லை என்பதால் இன்னும் பலர் வர யோசிக்கிறார்கள் போல...அப்படி இருந்தும் பல தடைகளை தாண்டி இந்த பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டு தன் இருப்பை காட்டி வருகிறார்...


விக்கி: என்னய்யா எப்படி போகுது வாழ்கை...


சிவா: ஏன்...அது இஷ்டத்துக்கு போகுது...நீங்க என்ன ஏதாவது திருப்பி விடப்போறீங்களா மாம்ஸ்!...


விக்கி பன்ச்: ஆளு விவேக் மாதிரி இருந்துகிட்டு பண்றது எல்லாம் கவுண்டர் போல ஹிஹி!


தொடரும்...


கொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹி!

63 comments:

நிரூபன் said...

இனிய மாலை வணக்கம் அண்ணே,
படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

விக்கி பன்ச்: சில நேரத்துல எதோ பிட்டு பட தலைப்பு போல இருக்கு தலைப்புகள் ஹிஹி!
//

அண்ணே பலவிதமான ரசனையுள்ள வாசகர்கள் வாறாங்க இல்லையா.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அதனால அவங்களைத் திருப்திப்படுத்த தான் இப்படிப் பண்ணிக்கிறேன்.

நிரூபன் said...

மிகப்பெரிய அளவில் குறுகிய காலத்தில் பதிவுலகில் சாதித்த பதிவர் என்பதில் இவருக்கு முதல் இடம் உண்டு...
//

இது ரொம்ப ஓவர் பாஸ்..நான் என்னா சாதித்தேன்..

அண்ணா நகரில என்ன ப்ளாட்டா வாங்கியிருக்கேன்.

நிரூபன் said...

சம்பத் அண்ணரை எனக்கும் பிடிக்கும்.
ஹே...ஹே...

நிரூபன் said...

சுரேஷ் அண்ணர் பத்தி சொல்லவே வேணாங்க..

ஆரம்பத்தில என் வலையில கமெண்ட் போட்டாரு.
நான் நினைச்சேன், இவரு புது ஆளு. கொஞ்ச நாள் விட்டு போயிப் பார்ப்போம் என்று.
திடீரென்று ஒரு நாள் போனேன். பிரமித்துப் போயிட்டேன்.

ஹே...ஹே..
அம்புட்டு நல்ல எழுத்து நடை, அழகிய பட டிசைன்கள்.

புதிதாக வந்த பதிவர்களுக்குள் ஆள் செம ஜோரு!

நிரூபன் said...

பிலாசபியின் எழுத்துக்களைப் பார்த்து அவருக்கு குத்து மதிப்பா ஒரு 28 இருக்கும் என்று நெனைச்சேன் (நான் வயசை சொல்றேன் நண்பர்களே)

அப்புறம் தான் போட்டோ பார்த்தப்போ...ஆளோட தோற்றம் விளங்கிச்சு,

டைட்டானிக் படத்தின் தமிழ் ரீமேக்கிற்காக ஆளு தலை முடி வளர்க்கிறாராம்.

நிரூபன் said...

நல்ல தொகுப்பு அண்ணே. அப்புறமா தலைப்பு விசயத்தில கொஞ்சம் கவனம் செலுத்துறேன்.
சிபி அண்ணர் ப்ளாக் போனால் தானகவே மறக்க நினைச்ச விஷயங்கள் வந்து ஒட்டிக்குது,
ஹே...ஹே...

ஆனாலும் மாசத்தில ஒரு கில்மா தலைப்பு போடுவோம்! ஓக்கே...

விக்கியுலகம் said...

@நிரூபன்

வருகைக்கு நன்றி நிரூ...மாலை வணக்கம்..எப்படி இருக்கீங்க...!

விக்கியுலகம் said...

@நிரூபன்
நிரூபன் said...
விக்கி பன்ச்: சில நேரத்துல எதோ பிட்டு பட தலைப்பு போல இருக்கு தலைப்புகள் ஹிஹி!
//

அண்ணே பலவிதமான ரசனையுள்ள வாசகர்கள் வாறாங்க இல்லையா.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அதனால அவங்களைத் திருப்திப்படுத்த தான் இப்படிப் பண்ணிக்கிறேன்.

>>>>>>>>

ஹஹா ரைட்டு..!..சிபி காத்து எல்லாம் ஹிஹி!

நிரூபன் said...

விக்கியுலகம் said...
@நிரூபன்

வருகைக்கு நன்றி நிரூ...மாலை வணக்கம்..எப்படி இருக்கீங்க...!//

ஹே..ஹே.

உங்கள மாதிரி நண்பர்களின் அன்பில ஏதோ நல்லா இருக்கேன்!
நமக்கு எல்லாம் வீடே இணையமாகிடுச்சே.
பெற்றோரை விட்டு சகோதரர்களை விட்டு பிரிந்திருக்கும் நேரம் நமக்கு இது தானே பாஸ் சொந்தம்!

விக்கியுலகம் said...

@நிரூபன்

“நிரூபன் said...
மிகப்பெரிய அளவில் குறுகிய காலத்தில் பதிவுலகில் சாதித்த பதிவர் என்பதில் இவருக்கு முதல் இடம் உண்டு...
//

இது ரொம்ப ஓவர் பாஸ்..நான் என்னா சாதித்தேன்..

அண்ணா நகரில என்ன ப்ளாட்டா வாங்கியிருக்கேன்.”

>>>>>>>>>>

சரி சரி விடுங்க..எதோ வாங்கினால் சர்தான் ஹிஹி!

விக்கியுலகம் said...

@நிரூபன்

சம்பத் மற்றும் சுரேஷ் ரெண்டு பேரும் கலக்கலான ஆளுங்க ஹஹா!

விக்கியுலகம் said...

@நிரூபன்

நிரூபன் said...
பிலாசபியின் எழுத்துக்களைப் பார்த்து அவருக்கு குத்து மதிப்பா ஒரு 28 இருக்கும் என்று நெனைச்சேன் (நான் வயசை சொல்றேன் நண்பர்களே)

அப்புறம் தான் போட்டோ பார்த்தப்போ...ஆளோட தோற்றம் விளங்கிச்சு,

டைட்டானிக் படத்தின் தமிழ் ரீமேக்கிற்காக ஆளு தலை முடி வளர்க்கிறாராம்.

>>>>>>>

ஓ இதான் காரணமா ஹேஹே!

விக்கியுலகம் said...

@நிரூபன்

நிரூபன் said...
நல்ல தொகுப்பு அண்ணே. அப்புறமா தலைப்பு விசயத்தில கொஞ்சம் கவனம் செலுத்துறேன்.
சிபி அண்ணர் ப்ளாக் போனால் தானகவே மறக்க நினைச்ச விஷயங்கள் வந்து ஒட்டிக்குது,
ஹே...ஹே...

ஆனாலும் மாசத்தில ஒரு கில்மா தலைப்பு போடுவோம்! ஓக்கே...

>>>>>>>>>

அடிச்சி விடுங்க ஹிஹி!

சம்பத் குமார் said...

வணக்கம் மாம்ஸ்

கிடைத்த அங்கீகார அறிமுகத்துக்கு முதலில் நன்றி

விக்கியுலகம் said...

@நிரூபன்

சரியா சொன்னீங்க சொந்தம் இதுதான் முகமறியா நண்பர்களின் அன்பு பினைப்பு போல வருமா...!

சம்பத் குமார் said...

// இவரு பாக்குற பார்வைய பாத்த லைட்டா அமீர் கணக்கா இருக்காரு...எதுக்கும் உலக படம் ஏதாவது சுட்டு எடுப்பாரா தெரியாதுங்கோ..!//

அடுத்ததா அமீர் அண்ணன்கிட்டதான் அசிஸ்டண்டா ஜாய்ன் பண்ணப் போரேன்

ஹி ஹி ஹி

சம்பத் குமார் said...

//இவருடைய குழந்தை வளர்ப்பு பற்றிய பதிவுகள் பிரசித்தி பெற்றவை...பல விஷயங்களை சொல்லி செல்லும் பாங்கு அருமையாக இருக்கிறது...நடு நடுவே..சமூக அவலங்களை பற்றிய கவிதைகளை அடித்து விடுகிறார்...//

நன்றி மாம்ஸ்

அனைத்துமே மனதில் பட்ட என் கிறுக்கல்களே..

எழுத வைக்கிற உங்கள் போன்ற உள்ளங்களுக்கும் கூகுள் ஆண்டவருக்கும் நன்றி

நிரூபன் said...

அண்ணே. எனக்கு பயமா இருக்கு, பிலாசபி வந்து ஏதாச்சும் பொங்கிடுவாரோ என்று..

ஹே...ஹே...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள உண்மைதான், நம்ம தமிழ் பேரன்ட்ஸ் சம்பத் தருகிற டிப்ஸ் சுப்பர் ஆ இருக்கு.. நன்றிகள் அவருக்கும், பதிவிட்ட உங்களுக்கும்..

விக்கியுலகம் said...

@சம்பத் குமார்

“ சம்பத் குமார் said...
// இவரு பாக்குற பார்வைய பாத்த லைட்டா அமீர் கணக்கா இருக்காரு...எதுக்கும் உலக படம் ஏதாவது சுட்டு எடுப்பாரா தெரியாதுங்கோ..!//

அடுத்ததா அமீர் அண்ணன்கிட்டதான் அசிஸ்டண்டா ஜாய்ன் பண்ணப் போரேன்

ஹி ஹி ஹி”

>>>>>>>>>

வாங்க சம்பத்...அப்போ அடுத்து என்ன படம் சீக்கிரம் சொல்லுங்க!

சம்பத் குமார் said...

@ நிரூபன் said...

// சம்பத் அண்ணரை எனக்கும் பிடிக்கும்.
ஹே...ஹே... //

வணக்கம் தலைவா..

உங்களுக்கு நான் அண்ணனா...

ஒரு டவுட்...

ஹி ஹி ஹி

விக்கியுலகம் said...

@சம்பத் குமார்

உங்களோட பார்வை அருமய்யா!

சம்பத் குமார் said...

@விக்கியுலகம்

//வாங்க சம்பத்...அப்போ அடுத்து என்ன படம் சீக்கிரம் சொல்லுங்க!//

”கம்பத்து சிங்கம்”

மாம்ஸ்

விக்கியுலகம் said...

@நிரூபன்

“நிரூபன் said...
அண்ணே. எனக்கு பயமா இருக்கு, பிலாசபி வந்து ஏதாச்சும் பொங்கிடுவாரோ என்று..

ஹே...ஹே...”

>>>>>>>>>

பொங்குவாரா பாப்போம் ஹிஹி!

விக்கியுலகம் said...

@!* வேடந்தாங்கல் - கருன் *!

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிய்யா!

சம்பத் குமார் said...

//சிவா: ஏன்...அது இஷ்டத்துக்கு போகுது...நீங்க என்ன ஏதாவது திருப்பி விடப்போறீங்களா மாம்ஸ்!...//

இதுவும் சரிதான மாம்ஸ்

விக்கியுலகம் said...

@சம்பத் குமார்

“சம்பத் குமார் said...
//சிவா: ஏன்...அது இஷ்டத்துக்கு போகுது...நீங்க என்ன ஏதாவது திருப்பி விடப்போறீங்களா மாம்ஸ்!...//

இதுவும் சரிதான மாம்ஸ்”

>>>>>>>>

அவரு ஸ்டைல் அப்படித்தானே ஹிஹி!

சம்பத் குமார் said...

//இவர பத்தி என்ன சொல்றது..அந்த காலத்து பாகவதர் ஸ்டைல்ல முடிய வச்சிக்கிட்டு..அஞ்சாதே வில்லன் கணக்கா பதிவெழுதுறாரு!.....இவரு பெரிய ஆளுங்க(!)... இந்த மூர்த்தி சின்னது கீர்த்தி(பொண்ணு இல்லைங்க!) பெரிசுன்னு சொல்வாங்களே...அது இவருக்கு நல்லாவே பொருந்தும்...இவரோட வலைச்சர உழைப்பு சான்சே இல்ல...இன்னைக்கு வரைக்கும் பலரால் செய்ய முடியாதது...ஒயின்ஷாப் எப்பவுமே ராவா இருக்குறது இவரோட பலம்!//

ஆமாம் மாம்ஸ் இவங்கள சங்கமத்துல மீட் பண்ணுர வாய்ப்பு கிடச்சது.

பிலாஷபி டாப்பு,
மெட்ராஸ்பவன் சிவா சரவெடி..

மனசாட்சி said...

தொடருங்கள் மாம்ஸ்...

இவர்களை எல்லாம் சந்திக்கணும் என்ற ஆசை உள்ளவன் மாற்று கருத்து இல்லை இது என் தனிப்பட்ட கருத்து

NAAI-NAKKS said...

Aaha.....
Anaivarukkum
vazhthukkal.....

Kuttu pattaalum
ring kaiyaal
kuttu padanum....

Enga vikki mams
arimugam....ellarium.....
Top-aa aakkidum....
Anaivarukkum
vazhthukkal.....

கோகுல் said...

மாம்ஸ்,
எல்லோருமே ஒவ்வொரு வகையான பட்டாசுகள்.
உங்க டிபிகல் பன்ச் வசனங்களுடன்
அறிமுகம் இன்னும் அசத்தல்.

veedu said...

மாம் எங்களைப் போன்ற புதியவர்களை(நிரூ..நீங்கலாக)அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி...(நிரூ பெரிய ஆளு...அந்த அர்த்தத்துல...சொன்னேன் உள் குத்து போட்டிருவாங்க தம்பி சூதானமா கமெண்ட் போடுடா சூனாகுனா அட சுரேஸ் குமார்யா)நமிதா கணக்கா....ம்ம் நான் ஆங்கில "A" புக்க படிச்சு கதையெழுதறது இல்லை மாம்....நம்ம தமிழ்நாட்டு கிராம மக்களின் கதைய சுட்டு எழுதுகிறேன், படிக்காத அவர்களின் வாழ்வியலை எழுதுகிறேன், அதுவும் சென்சார் செய்து, அப்படியே போட்டனா இப்ப உள்ள களி தின்னுட்டு இருப்பேன்...நாய்ஸ் மச்சி! சொன்ன மாதிரி மேதிரக் கையால குட்டியிருக்கிங்க...முடிந்தவரை தவிர்க்கிறேன்...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அறிந்துகொண்டேன்.

காட்டான் said...

வணக்கம் மாப்பிள..!
புதிய அறிமுகங்கள் கிடைத்தது நன்றி..!!

Yoga.S.FR said...

வணக்கம் விக்கி சார்!///கொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹி!////போட்டு??????????

! சிவகுமார் ! said...

சுள்ளான்,விவேக்..அதுசரி.

//என்ன ஒன்னு நாம அவர் இஷ்டத்துக்கு படிக்கனும்ங்கறது போலவே சில பதிவுகள் இருக்கு //

அது கிட்டத்தட்ட எல்லாருக்கும் இருக்குற வியாதிதான். சங்கமம் பற்றி புகழ்ந்து எழுதிய ஒரு வரிகூட யார் கண்ணிலும் படாவிடில் நான் என்ன செய்ய? நிகழ்ச்சி நடத்திய நண்பர் ஒருவரிடம் இதை தெளிவாக கூறிவிட்டு, அவர் சொன்னபிறகே அந்த பதிவைப்போட்டேன். ஒவ்வொண்ணுத்துக்கும் விளக்கம் அளிச்சே ஓஞ்சி போயிட்டேன் மாம்ஸ்.

! சிவகுமார் ! said...

நிரூபன், சுரேஸ், சம்பத், பிரபாகரன் அனைவருக்கும் வாழ்த்துகள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏன்யா ஒரு நாலு நாளு வரலேன்னா அதுக்காக இப்படியா வதவதன்னு பதிவு போட்டு தள்ளுறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கி பன்ச்: சில நேரத்துல எதோ பிட்டு பட தலைப்பு போல இருக்கு தலைப்புகள் ஹிஹி!////

ஜாலியா படிச்சிப்புட்டு இப்ப பேச்சப்பாரு படுவா.....

FOOD NELLAI said...

மோதிரக்கையால் குட்டுப்பட்டுள்ள சிவகுமாருக்கு வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இது திரு...உலக நாயகன் ரேஞ்சுக்கு சிகை அலங்கராம் செய்து இருக்கும் பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...திரு..பிலாசபி பிரபா: /////

ஒலக நாயகன் இப்படியா முடி வெச்சிருக்காரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////.இவரோட வலைச்சர உழைப்பு சான்சே இல்ல...இன்னைக்கு வரைக்கும் பலரால் செய்ய முடியாதது../////

உண்மை.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஒயின்ஷாப் எப்பவுமே ராவா இருக்குறது இவரோட பலம்!/////

அடிச்சிட்டு எழுதுவாரோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பிரபா: ஏன் தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க...யோவ் இப்போ நான் உன்கிட்ட பேசுனத பதிவா போட்டு தொலைக்காத..!////

தக்காளிய கரெக்டா புரிஞ்சு வெச்சிருக்காப்ல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சிவான்னு பேரு வச்சிக்கிட்டு...சிவ சிவான்னு இருக்குற பல அரசியல் விஷயங்கள மேலோட்டமா போட்டு கொல்றாரு! சமீபத்திய தாக்கம்..உற்சாக பானம் பற்றிய பதிவு அருமை!.../////

யோவ் தக்காளி... இவரு சினிமா விமர்சனம் கூட நல்லாருக்கும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹி!/////

தக்காளி அடங்க மாட்டேங்கிறானே......?

FOOD NELLAI said...

//அப்படி இருந்தும் பல தடைகளை தாண்டி இந்த பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டு தன் இருப்பை காட்டி வருகிறார்.../;/

அப்ப நம்ம சிவகுமார் தடை பல தாண்டும் படைக்கள வீரர்னு சொல்லுங்க.

! சிவகுமார் ! said...

//கொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹி!//

எதுக்கு. அப்பறம் அதுக்கு தனியா ஒரு உள்குத்து பதிவு போடுவீங்க. அப்பறம் உங்களுக்கே எதிர்பதிவு போட்டுப்பீங்க. வடிவேலு கெணத்த காணோம் காமடி மாதிரி 'உங்களையே காணும்'னு இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லுவீங்க. வெரி டேஞ்சரஸ் பார்ட்டி :-)

FOOD NELLAI said...

//கொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹிகொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹி//
இது கொசுறு அல்ல, நேருக்கு நேர் மோத அழைக்கும் சவால். ஹா ஹா ஹா.

! சிவகுமார் ! said...

@ உணவு நெல்லை

சார். விக்கி ப்ளாக்க ரெண்டு நாள் சேந்தாப்ல படிச்சா நமக்கும் இப்படி ஆயிரும். நீங்க போட்ட கமண்டல எதுவும் உள், உள்ளுக்கு உள் குத்து எதுவும் இல்லையே?

! சிவகுமார் ! said...

@ काना, NELLAI

//இது கொசுறு அல்ல, நேருக்கு நேர் மோத அழைக்கும் சவால்.//

நேருக்கு நேர் மட்டுமா..காந்திக்கு நேரா கூட உள்குத்து போடுவாரு விக்கி!!

கும்மாச்சி said...

மாப்பிள பதிவர்களைப் பற்றிய மேட்டர் சும்மா நச்சுன்னு இருக்கு.

கும்மாச்சி said...

மாப்பிள பதிவர்களைப் பற்றிய மேட்டர் சும்மா நச்சுன்னு இருக்கு.

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

மாம்ஸ் நல்ல பதிவர்களை அடையாளம் காட்டி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. எங்க வேலை கொஞ்சம் மிச்சம்..

MANO நாஞ்சில் மனோ said...

கொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹி!//

நாதாரி சண்டைக்கு கூப்புடுற லட்சணத்தை பாருங்க, எலேய் யாராவது போயி மாட்டிக்காதீங்கப்பா பயபுள்ள ராவா கூப்புடுது.....

MANO நாஞ்சில் மனோ said...

நிரூபன் said...
பிலாசபியின் எழுத்துக்களைப் பார்த்து அவருக்கு குத்து மதிப்பா ஒரு 28 இருக்கும் என்று நெனைச்சேன் (நான் வயசை சொல்றேன் நண்பர்களே)

அப்புறம் தான் போட்டோ பார்த்தப்போ...ஆளோட தோற்றம் விளங்கிச்சு,

டைட்டானிக் படத்தின் தமிழ் ரீமேக்கிற்காக ஆளு தலை முடி வளர்க்கிறாராம்.//

ஹா ஹா ஹா ஹா முடியல....

அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..

Ramani said...

அறிமுகத்திற்கு நன்றி
அறிமுக மானவர்களுக்கு வாழ்த்துக்கள்

வெளங்காதவன் said...

மாம்ஸு... தொடரட்டும் உம் பொன்னான பணி!!!

#யோவ்... எனக்கு தெரிஞ்சு இந்த போஸ்ட்டுக்குத்தான் அதிக கமெண்டு வந்திருக்குன்னு நெனைக்குதேன்....

தமிழ்வாசி பிரகாஷ் said...

மாம்ஸ், பதிவர்களின் அறிமுகம் மற்றும் உங்க கமெண்ட்ஸ் நல்லா இருக்கு....

ஒரு சந்தேகம் இன்னும் எத்தன தொடர் போடற மாதிரி ஐடியா?

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி , இந்த மேட்டரை வெச்சு 10 போஸ்ட் தேத்திடுவான் போல அவ்வ்

K.s.s.Rajh said...

பாஸ் அப்படியே பதிவர்கள் பற்றி புட்டு புட்டு வைக்கிறீங்க இந்த பதிவின் மூலம் தமிழ் பேரணா சம்பத்குமார் அண்ணன் அவர்களில் படத்தை பார்க்க முடிந்தது நன்றி...