Friday, February 3, 2012

குரூப் சேர்றதுன்னா! - அது ஒரு டீன் ஏஜ் காலம்!

வணக்கம் நண்பர்களே...


அப்போது நாங்கள் இருந்த காம்பவுண்டில் பல வீடுகள் இருந்தன..குறைந்த வாடகையில் இருந்து ஆரம்பித்து பெரிய அளவு வாடகை வரை...நெறைய நண்பர்கள்..

அதில் பெண்கள் குறைவாக இருந்தாலும்(!)...இவர்களை பார்க்க வரும் பெண்கள் அதிகம்(!)...நெறைய பேரோட அறிமுகம் கிடைத்தாலும், ஒரு வித தயக்கம் இருக்கும்...காரணம் அவர்களின் ஆடைகள் மற்றும் பேச்சி...சில நேரங்களில் மனதை பாதிக்கவும் செய்யும்!..

பத்தாவது முடித்து அடுத்த +1 எனப்படும் அடுத்த தொடக்கதுக்காக பள்ளியில் சேர முடிவு செய்த காலம்...இவன் படிச்சி என்ன பண்ணப்போறான்...இவனை தொழில் நுட்ப சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு அனுப்பி வச்சா..ரெண்டு வருசத்துல வேலைக்கு போய் வீட்டுக்கு உபயோகமா இருப்பானே என்று பலர் சொன்ன போதும்..என் அப்பாவும், அக்காவும் இவனை ஒரு டிகிரி வாங்க (காபி இல்லீங்க!) வைக்கனும்னு போராடினாங்க...அதிலும் அக்கா பங்கு அதிகம்..


ஸ்கூல்ல எந்த குரூப்(இது வேற!) எடுப்பது என்பதில் எனக்கு தயக்கம்...சரி கணக்கே இல்லாத குரூப் எதுன்னு பாத்திட்டே வந்து டிக் பண்ணிட்டேன்...இனி கணக்கு தொல்லை இல்லன்னு முடிவு பண்ணி அப்பாருக்கிட்ட சொல்லிட்டேன்...அவரும் சரின்னு பீச கட்டி புட்டாரு...அப்புறம் என் நண்பிகளும் அதே க்ரூப்பை எடுத்தது தெரிந்தது...ஏன் நீங்களும் இந்த க்ரூப்பை எடுத்தீங்கன்னு கேட்ட போதுதான் புரிஞ்சது...அது முதல் குரூப் அதாவது இந்த பாட திட்டம் எடுப்பவர்களால் தான் மெடிக்கல் மற்றும் இஞ்சினியரிங் படிப்புக்கு போக முடியும்னு!..

ச்சே மறுபடியும் பல்ப்பா(!)...ஏன்டா ஒன்னுத்த ஒழுங்கா பண்ண மாட்டியா...ச்சே அந்த படிவத்துல கீழ கடைசில கணக்குன்னும் இருந்ததே அதை கவனிக்கலியா நீ - இப்படிக்கு மனசாட்சி டு விக்கி!

அந்த கேண்டீன்ல உக்காந்து இருந்தேன்...

டேய் விக்கி...

சொல்லு வசந்தி...

என்ன ஒரு மாதிரியா இருக்க...

இல்ல இப்பத்தான் பாத்தேன் உண்மையிலேயே இந்த கிளாஸ்ல கணக்கு இருக்கு...

அப்போ நாங்க சொல்லும்போது நம்பலியா...

இல்ல எங்க அக்காவும் ஒண்ணுமே சொல்லலியே...அதான்!

அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும்...நீ எங்க கேக்காம போயி கணக்கு இல்லாத பாடத்திட்டம் எடுத்திடுவியோன்னு பயந்திட்டு சொல்லாம விட்ருப்பாங்க...

ஆமாம், அப்படிதான் இருக்கும்..பெங்களூர்ல படிச்ச அவங்களுக்கு தெரியாம இருக்குமா...என்னைய ஏமாத்தி புட்டாங்களே..

 விட்ரா இதுவும் நல்லதுக்கு தான்...இப்போ நாம எல்லாம் ஒரே குரூப்!

ஆமா இதுல நான் மட்டும் நொந்த குரூப் ஹிஹி!

அது சரி சம்பத்தும் இந்த குரூப்ல சேந்து இருக்கான் பாத்தியா...

அதானே பாத்தேன் உன்னைய விட்டு அவன் எப்படி தனியா ஹிஹி!..

ச்சி அப்படியெல்லாம் இல்ல...

ம்ம் நடத்துங்க...பாத்து உங்கப்பாரு பின்னிடுவாரு...

உன்கிட்ட போய் சொன்னேன் பாரு...அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல...சரி சித்ரா இன்னைக்கு எல்லோரையும் மலைக்கோயிலுக்கு வர சொல்லி இருக்கா!

ஓ அப்படியா...இன்னைக்கு வெள்ளிகிழமையா அதான்!...

ஆமா, மறக்காம வந்துடு உன்கிட்ட எதோ பேசணுமாம்!

ஓ...சரி பாப்போம்..அவ என்ன குண்ட தூக்கி போடப்போறாளோ!   

(சம்பத் அந்தப்பக்கமா வந்தான்!)

வாடா வா...உன்னைய பத்தி தான் பேசிட்டு இருந்தோம்..

எது என்னைய பத்தியா என்னன்னு...

டேய் நான் கெளம்பறேன் என்றாள் வசந்தி!

எங்க போற இரு மாப்ள வந்து இருக்கான் இல்ல..

ராஸ்கல் உனக்கு எப்ப பாரு இதே பொழப்பு...நான் வரேன் பை விக்கி..பை சம்பத்..!

அட என்னய்யா இந்த பொண்ணுங்க...சட்டுன்னு கிளம்பிடுராங்களே..(அவள் சென்றே விட்டாள்!)

அப்புறம் மணி என்ன வசந்தி சிக்கிட்டா போல!

அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல...ஏன் நீ யாரையாவது ட்ரை பண்றியா...

ஆமாம், ஏன்டா நீ வேற...நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லடா ஹிஹி!

ம்ம் இப்போ இந்த குரூப்ல எல்லோரும் ஒன்னாயிட்டோம்...இனி கலக்குவோம்!

எதை கலக்கறது...எனக்கு ஏற்கனவே கணக்கும் இங்கிபீசும் தகராறு...இதுல இப்ப வந்து மாட்டிகிட்டேன்...

விட்ரா எல்லாம் நம்ம மனசு தான் காரணம்...நீ வேணா பாரு கலக்கப்போறே இதே குரூப்ல!


பாப்போம்...அய்யா புள்ளையாரப்பா என்னைய காப்பாத்து...


எங்கிருந்தோ வந்த பந்து என்னை பதம் பார்த்தது!


தொடரும்!


கொசுறு: இந்த தொடர் மொக்கையாக இருந்தாலும் பொறுத்து கொள்ளும் தன்மை மிக்க நண்பர்களை பெற்றது என் பாக்கியம்(குத்துங்க எசமான்!)

18 comments:

சி.பி.செந்தில்குமார் said...

??>>>இந்த தொடர் மொக்கையாக இருந்தாலும் பொறுத்து கொள்ளும் தன்மை மிக்க நண்பர்களை பெற்றது என் பாக்கியம்(குத்துங்க எசமான்!)

hi hi நீயும் மொக்கை, நானும் மொக்கை.. நினைச்சுப்பார்த்தா எல்லாம் மொக்கை

NAAI-NAKKS said...

Yowwwww
cps
neenga innum
padathukku
pogaliya....?????

NAAI-NAKKS said...

Naan
cps
comment-i
vazhi mozikiren.....
He...he...he....

dhanasekaran .S said...

பதிவு பிரமாதம் மாம்ஸ்.

FOOD NELLAI said...

// NAAI-NAKKS said...
Naan
cps
comment-i
vazhi mozikiren.....
He...he...he....//
நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

FOOD NELLAI said...

சரி, விக்கி உடான்ஸ்,இண்ட்லி இணைப்பு கொடுத்தாச்சு.

FOOD NELLAI said...

மலரும் நினைவுகளா, மயக்கிய நினைவுகளா?

! சிவகுமார் ! said...

//சி.பி.செந்தில்குமார் says:February 3, 2012 11:24 AM Reply
??>>>இந்த தொடர் மொக்கையாக இருந்தாலும் பொறுத்து கொள்ளும் தன்மை மிக்க நண்பர்களை பெற்றது என் பாக்கியம்(குத்துங்க எசமான்!)

hi hi நீயும் மொக்கை, நானும் மொக்கை.. நினைச்சுப்பார்த்தா எல்லாம் மொக்கை//

ஹா.ஹா...தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்க வேண்டிய பின்னூட்டம். விக்கி டுமீல்!!

! சிவகுமார் ! said...

//விக்கியுலகம் ஓசியில் இருந்து சொந்த தளமான www.vikkiulakam.com மாறி இருசொந்த தளமான www.vikkiulakam.com மாறி இருக்கிறார்!..இதுவரை என்னை தொடர்ந்த நண்பர்கள், ஒரு முறை unfollow செய்து
இருக்கிறார். இதுவரை என்னை தொடர்ந்த நண்பர்கள்,
ஒரு முறை unfollow செய்து மீண்டும் ஒரு முறை follow செய்துக்கங்க.. //

ண்ணா...சர்ணா!!

ரமேஷ் வெங்கடபதி said...

பழங்கதைகள் என்றுமே ஸ்வாரஸ்யமே!

K.s.s.Rajh said...

பாஸ் இந்த தொடர் மொக்கை என்று நீங்க தான் சொல்லுறீங்க ஆனா படிக்க செம சுவாரஸ்யமாக இருக்கு.

FOOD NELLAI said...

நாங்களும் புதுசா தொடர்ந்துட்டோம்ல.

ஹாலிவுட்ரசிகன் said...

நல்லாத்தானே இருக்கு??? பதிவுகள் தொடரட்டும் மாம்ஸ்.

ஆமினா said...

அடுத்த பாகத்துல மலைகோட்டைல இருந்து அந்த பொண்ணு உங்கள கீழ தள்ளி விட்டுடும்.. அதுதானே ஹி..ஹி..ஹி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ங்கொய்யால அப்படிப் போடு அருவாள.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் ஓசியில் இருந்து சொந்த தளமான www.vikkiulakam.com மாறி இருசொந்த தளமான www.vikkiulakam.com மாறி இருக்கிறார்!..இதுவரை என்னை தொடர்ந்த நண்பர்கள், ஒரு முறை unfollow செய்து
இருக்கிறார். இதுவரை என்னை தொடர்ந்த நண்பர்கள்,
ஒரு முறை unfollow செய்து மீண்டும் ஒரு முறை follow செய்துக்கங்க.. //////

எங்களுக்கு அதெல்லாம் தேவையில்லீங்கோ, இதெல்லாம் பண்ணாமயே கரெக்டா வருதுங்கோ...... நாங்கள்லாம் யாரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கொசுறு: இந்த தொடர் மொக்கையாக இருந்தாலும் பொறுத்து கொள்ளும் தன்மை மிக்க நண்பர்களை பெற்றது என் பாக்கியம்(குத்துங்க எசமான்!)/////

ங்கொய்யால இப்படி மொக்க போடுறதுக்கெல்லாம் ஒரு தனி டொமைனு? வெளங்கிரும்....

ரஹீம் கஸாலி said...

@பன்னிக்குட்டி ராம்சாமிங்கொய்யால இப்படி மொக்க போடுறதுக்கெல்லாம் ஒரு தனி டொமைனு? வெளங்கிரும்....///
அதே....