Thursday, March 8, 2012

உலக மகளிர் தினம்(Wo) - (இரவுகள் விடியுமா!)

வணக்கம் நண்பர்களே.....


இந்தப்பதிவு என்னுடைய பார்வை மட்டுமே...




இன்னும் பல பெண்களின் இரவு விடியாமலேயே உள்ளது..


"பட்டணத்து காதல் எல்லாம் பாதியிலே முடியுதப்பா பட்டிக்காட்டு காதலுக்கு கெட்டியான உருவப்பா...காசு பணம் சேருதப்பா காரு வண்டி பறக்குதப்பா....சேர்த்த பணம் செலவழிஞ்சா நாட்டுப்பக்கம் திரும்புதப்பா......... "


இந்தப்பாடல் எனக்கு கேட்க்கும்போதேல்லாம் தோன்றும் ஒரு விஷயம் இதில் பாதி உண்மையில நடந்துட்டு இருக்குங்கறது தான்...எல்லோரும் மகளிர் தினமென்றால் பட்டினத்து பெண்களில் சிலரை வைத்தே பார்ப்பது தவறு என்பது என் கருத்து.....


ஒரு குடம் தண்ணீர் எடுத்துவர இன்றும் பல மைல் தூரம் நடக்கும் இந்த பெண்களின் உழைப்பை என்ன சொல்வது....


இந்தப்பெண்களை பாருங்கள்....எந்த அளவுக்கு கடின உழைப்பை மேற்கொள்கிறார்கள்...நாள் முழுதும் உடல் வளைந்து நாற்று நடும் பெண்ணுக்கு ஈடாகுமா நம் ஒரு மாத உழைப்பு...வாழ்வில் என்ன சுகம் கண்டார்கள் இப்பெண்கள்....



இன்று பல வீடுகளில் குடித்துவிட்டு பெண்களை அடித்துக்கொண்டும், தன் வாழ்வை மட்டும் தொலைக்காமல் தன் குடும்பத்தையும் தொலைத்துக்கொண்டு இருக்கும் பல ஆண்களிடம் பெண் தோற்றுக்கொண்டு தான் இருக்கிறாள்......




உடல் உபாதைகளில் பெண்களின் பாடு கொடுமையானதாக இருந்தாலும் அவர்கள் அதனை மீறித்தான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக......


சில நாகரிகம் எனும் போதையில் இருக்கும் பெண்களை வைத்து மட்டுமே நாம் முழுமையான சமுதாயத்தை முடிவு செய்ய இயலாது...நம் அன்பு தாய், தமக்கை போன்ற இந்த தெய்வங்களின் உழைப்பில் சாப்பிட்டு கொண்டு இருக்கும் ஒரு சாதாரண ஆணாக நான்...





கொசுறு: மகளிர் தினம் என்பது இன்னும் விடியாத, உண்மையில் விடிய வேண்டிய சமுதாயத்துக்கான தினம்.


20 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஹலோ என்ன அண்ணே ஒரு ஆளையும் காணோம், ஹி ஹி...

K.s.s.Rajh said...

நீங்கள் சொல்வது யாதார்த்தமான உண்மை பாஸ் எத்தனையோ பெண்களின் இரவு விடியாமலேயே உள்ளது..

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே நீங்க சொன்னா சரிதாம்ன்னே....

K.s.s.Rajh said...

////இந்தப்பெண்களை பாருங்கள்....எந்த அளவுக்கு கடின உழைப்பை மேற்கொள்கிறார்கள்...நாள் முழுதும் உடல் வளைந்து நாற்று நடும் பெண்ணுக்கு ஈடாகுமா நம் ஒரு மாத உழைப்பு...வாழ்வில் என்ன சுகம் கண்டார்கள் இப்பெண்கள்....////

நானும் மிகவும் யோசிக்கும் ஒரு விடயம் இது எங்கள் ஊர்களில் நிறைய பெண்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் முன்பு இருந்தது இப்ப மாறி வருகின்றது.

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

வாங்கன்னே வாங்க..எப்படி இருக்கீங்க!

விக்கியுலகம் said...

@K.s.s.Rajh

K.s.s.Rajh said...
நீங்கள் சொல்வது யாதார்த்தமான உண்மை பாஸ் எத்தனையோ பெண்களின் இரவு விடியாமலேயே உள்ளது..

>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி மாப்ள...உண்மை தானே!

விக்கியுலகம் said...

@MANO நாஞ்சில் மனோ

MANO நாஞ்சில் மனோ said...
அண்ணே நீங்க சொன்னா சரிதாம்ன்னே....

>>>>>>>>>

நீங்க சொல்லிட்டீங்கல்ல ஒத்துக்கரேன்!

விக்கியுலகம் said...

@K.s.s.Rajh

K.s.s.Rajh said...
////இந்தப்பெண்களை பாருங்கள்....எந்த அளவுக்கு கடின உழைப்பை மேற்கொள்கிறார்கள்...நாள் முழுதும் உடல் வளைந்து நாற்று நடும் பெண்ணுக்கு ஈடாகுமா நம் ஒரு மாத உழைப்பு...வாழ்வில் என்ன சுகம் கண்டார்கள் இப்பெண்கள்....////

நானும் மிகவும் யோசிக்கும் ஒரு விடயம் இது எங்கள் ஊர்களில் நிறைய பெண்களின் வாழ்க்கை முறை இப்படித்தான் முன்பு இருந்தது இப்ப மாறி வருகின்றது.

>>>>>>>>

ஓஹே நல்லது நடந்தால் சர்தான்!

FOOD NELLAI said...

மகளிர் தினத்தை மனதில் வைத்து, மன உணர்வுகளை மிக அழகா சொல்லியிருக்கீங்க. நன்றி.
சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.

விக்கியுலகம் said...

@FOOD NELLAI

FOOD NELLAI said...
மகளிர் தினத்தை மனதில் வைத்து, மன உணர்வுகளை மிக அழகா சொல்லியிருக்கீங்க. நன்றி.
சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்.

>>>>>>>>>

வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி!

ரேவா said...

மகளிர் தினம் என்பது இன்னும் விடியாத, உண்மையில் விடிய வேண்டிய சமுதாயத்துக்கான தினம்.

சகோ உங்க கொசுறே அழுத்தமான உண்மையை சொல்கிறது, விடியல் வந்தால் சரி தான் :)

சி.பி.செந்தில்குமார் said...

இது அண்ணி போட்ட போஸ்ட் போல? ஹி ஹி

Ramani said...

மகளிர் தின சிறப்புப் பதிவு
மிக மிக அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

விக்கியுலகம் said...

@ரேவா

ரேவா said...
மகளிர் தினம் என்பது இன்னும் விடியாத, உண்மையில் விடிய வேண்டிய சமுதாயத்துக்கான தினம்.

சகோ உங்க கொசுறே அழுத்தமான உண்மையை சொல்கிறது, விடியல் வந்தால் சரி தான் :)

>>>>>>>>>>>>

வருகைக்கு நன்றி சகோ...விடியும் என்று நம்புவோம்!

விக்கியுலகம் said...

@சி.பி.செந்தில்குமார்

சி.பி.செந்தில்குமார் said...
இது அண்ணி போட்ட போஸ்ட் போல? ஹி ஹி

>>>>

அண்ணே ஏன்?

விக்கியுலகம் said...

@Ramani

வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி அண்ணே!

NAAI-NAKKS said...

நல்ல பதிவு...
அருமை...
வாழ்த்துக்கள்...

ஹி...ஹி...ஹி..

கக்கு - மாணிக்கம் said...

ஐயோ....விக்கி.......இதெல்லாம் ஒரு சடங்கு சம்பிரதாயம்...காந்தி ஜெயந்தி, ஜெயலிதா பிறந்தநாள், சுதந்திர தினம், காதலர் தினம், அம்மா தினம் , அப்பா தினம் போல....குழந்தைகள் தினம் ......நாய்கள் தினம், பேய்கள்தினம்.... ராகூளுக்கு தாடி முளைத்த தினம்,.......இதெற்கெல்லாம் அலட்டிக்கலாமா?
அப்புறம் உடம்புக்கு ஏதாவது வந்துவிடும்.

இப்படி தினங்களை கொண்டாட நாம் கற்று கொண்டதின் காரணம் இன்னுமா புரியவில்லை?

இந்த கண்ட்றாவிகளை எல்லாம் பற்றிய எண்ணமே இல்லாமல் மகளிர் , ஆடவர் எவரும் அவரவர் தங்கள் வேலைகளை செய்துகொண்டுதான் உள்ளனர். அவர்களின் வயிற்று பாட்டிற்கு. ஊடகங்களின் பம்மாத்து இவைகள் எல்லாம். அது பிலாக்கர்களையும் விட்டுவைக்குமா என்ன?

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மகளிர் தின வாழ்த்துகள். நாடும் வீடும் முன்னேற பெண்கல்வி அவசியம். நல்லதொரு பகிர்வு.

திண்டுக்கல் தனபாலன் said...

தவறான கருத்துக்கள் கொண்டுள்ள பல மனிதர்களுக்கு நன்கு உரைக்கிற மாதிரி (செருப்படி - [திருந்துவளாங்க சார் !] ) ஒரு பதிவு தொகுத்து கொண்டு வருகிறேன் ! விரைவில் மின்சாரம் சரியாகட்டும் - மின்சாரம் அது சம்சாரம் !