Wednesday, April 25, 2012

எலேய் வெண்ணை வெட்டிகளா!

வணக்கம் நண்பர்களே..


ஒரு நெசம் சொல்லப்போறேன்...!

ஒரு சூனியத்துக்கு பல புள்ள குட்டிங்கோ...அதில் சிலதுங்க எதோ சரக்க அடிச்சமா...குட்டிகளோட கும்மி அடிச்சமான்னுட்டு இருந்துதுகள்...அதையும் தாண்டி சில குட்டிகள் ஜபர்தஸ்துடன் எல்லோரும் பயப்படும் படி இருந்து வந்தன..

நெடுநாளாக உள்ளுக்குள்ளே குமுங்கிக்கொண்டு இருந்த வெண்ணை(!)...கொஞ்ச கொஞ்சமாக உருக ஆரம்பித்தது...இப்போதான் அந்த வெண்ணைக்கு தெரிந்தது..நாம இப்படியே இருந்தா நெய் ஆக முடியாதுன்னு...சரி அந்த இன்னொரு வெண்ணைய உருக்காம செய்ய முயற்சிப்பன்னுவோம்னு இறங்கிச்சி...

போறாத காலம் ஏற்கனவே நெய் பதத்துக்கு வந்திட்டு இருந்த சின்ன வெண்ணை சூனியத்துக்கிட்ட போய் சண்ட போட்டுது...அதுக்கு சூனியமும் பெரிய வெண்ணைய திட்டி தீத்துது...

இப்போ சூனியத்துக்கு போறாத காலம்ங்கரத...ரெண்டு வெண்ணைகளும் புரிஞ்சிக்காம இருக்கறது தான் கொடுமையே...

குறிஞ்சி மலரின்(!) பாசத்தால பாவ்லா காட்டிட்டு இருக்கும் சூனியத்துக்கு..ஒரு விஷயம் புரிஞ்சி போச்சி...சீக்கிரத்துல முதலுக்கே மோசம் வரப்போகுதுன்னு...அதுக்குள்ளார எப்படியாவது புள்ள குட்டிங்கள கரை(!) சேர்க்க படாத பாடு பட்டுகிட்டு இருக்கு...


இதுக்கு நடுவுல நீண்ட நெடுங்கலாமா பொழப்ப நடத்த வச்ச சண்ட மேட்டரும் ஓஞ்சி போனதால..இப்போ யாரை வச்சி மங்காத்தா ஆடுறதுன்னு தெரியாம..மண்டைய உருட்டி கிட்டு இருக்கு...

எங்க என்ன சேதாரம் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்குக...

மக்களே உசாரா இருங்கோ!..

9 comments:

mathi sutha said...

அண்ணே கன நாளைக்கு அப்புறம் வந்ததால கொஞ்சம் சுத்துது...

மனசாட்சி™ said...

மாம்ஸ்

சூனியம்....நல்லா சொன்நீயல் போங்க மக்களே உசார்

Yoga.S.FR said...

வணக்கம் வெங்கட் சார்!என்னடா இது மருதைக்கு,(மதுரைக்கு?)வந்த சோதன????

MANO நாஞ்சில் மனோ said...

டேய் என்னடா சொல்ல வாறே ஒன்னுமே முடியல ச்சே ச்சீ பிரியல...

! சிவகுமார் ! said...

what koduma saravanan?

உலக சினிமா ரசிகன் said...

கோபாலபுரத்து வெண்ணெய் வெட்டி சிப்பாய்கள்.... ஒண்ணை ஒண்ணு வெட்டி சாய்ச்சுக்கிட்டு ஒழியணும்.
அதுதான் நாட்டுக்கு நல்லது.

பட்டாபட்டி.... said...

:-)

செத்த பாம்பை, அதோட பேர் சொல்லியே எழுதியிருக்கலாம்...

:-))))))))))))

வீடு சுரேஸ்குமார் said...

இதபார்ரா......! கவிதை சூப்பரு மாமு!

Vijayan K.R said...

ரொம்பவும் யோசிக்க வைச்சிட்டீங்க. நாஙகெல்லாம் மூளையை ரொம்ப புதுசா ஃப்ரஸ்ஸா மெயிண்டெயின் பண்ணீகிட்டுவாரோம் இப்படி யோசிக்க வைச்சி அதை பழசாக்கீறாதீக. சொல்லிப்புட்டேன்... பிறகு மார்கட்டுல வில போகது.